ஐ.பி.எல்.: ஐதராபாத்துக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த பஞ்சாப் கிங்ஸ்

இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் ஐதராபாத் - பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன.;

Update:2025-04-12 20:37 IST

image courtesy:twitter/@IPL

ஐதராபாத்,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. ஷமி வீசிய முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் பவுண்டரி அடித்து பிரம்சிம்ரன் சிங் அதிரடி காட்டினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரியன்ஷ் ஆர்யாவும் வேகமாக மட்டையை சுழற்ற பஞ்சாப் 3 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது.

தொடர்ந்து அதிரை காட்டிய பஞ்சாப் பவர்பிளே ஆன முதல் 6 ஓவர்களில் மட்டும் ஒரு விக்கெட்டை இழந்து 89 ரன்கள் குவித்தது.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஐதராபாத் அணிக்கு எதிராக பவர்பிளேயில் அதிக ரன் குவித்த அணி என்ற மாபெரும் சாதனையை பஞ்சாப் கிங்ஸ் படைத்துள்ளது. இதற்கு முன்னர் டெல்லி அணி 88 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள பஞ்சாப் புதிய சாதனை படைத்துள்ளது.

தற்போது வரை பஞ்சாப் 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் குவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்