ஐபிஎல்: குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதல்

9-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது;

Update:2025-03-29 06:42 IST
ஐபிஎல்: குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதல்

ஆமதாபாத்,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது . ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு (சனிக்கிழமை) நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது.

முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த இவ்விரு அணிகளும் வெற்றி கணக்கை தொடங்க கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் முந்தைய ஆட்டத்தை போலவே ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3-ல் குஜராத்தும், 2-ல் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்