சர்வதேச டி20 கிரிக்கெட்: முதலிடத்தில் பாபர்..2-வது இடத்தில் கோலி..எதில் தெரியுமா..?

சூப்பர் 8 சுற்றில் நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 24 ரன்கள் அடித்தார்.

Update: 2024-06-21 03:47 GMT

பிரிட்ஜ்டவுன்,

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்றிரவு பிரிட்ஜ்டவுனில் நடந்த ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 'டாஸ்' வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித்கான், பசல்ஹக் பரூக்கி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் 53 ரன்கள் அடித்தார்.

இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 134 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் பும்ரா மற்றும் அர்ஷ்தீப்சிங் தலா 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

முன்னதாக இந்த தொடரில் முதல்முறையாக இரட்டை இலக்கத்தை கடந்த விராட் கோலி 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் சாதனை பட்டியலில் ரோகித் சர்மாவை முந்தி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த ஆட்டத்திற்கு முன்பாக விராட் கோலியும், ரோகித் சர்மாவும் 2-வது இடத்தில் சமநிலையில் இருந்தனர். தற்போது கோலி (4,066 ரன்), ரோகித் சர்மாவை (4,050 ரன்) முந்தியுள்ளார். முதலிடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (4,145 ரன்) இருக்கிறார்.

அந்த பட்டியல்:

1.பாபர் அசாம் - 4145 ரன்கள்

2. விராட் கோலி - 4066 ரன்கள்

3. ரோகித் சர்மா - 4050 ரன்கள்

Tags:    

மேலும் செய்திகள்