சி.எஸ்.கே.நிர்வாகம் என்னை ஏலத்தில் எடுக்கும் என நம்புகிறேன் - தீபக் சாஹர்

சென்னை அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளது

Update: 2024-11-12 06:44 GMT

சென்னை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன.அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சி.எஸ்.கே.) 5 வீரர்களை தக்கவைத்துள்ளது. அதன்படி எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே மற்றும் மதீசா பதிரானா ஆகிய 5 வீரர்களை அந்த அணி தக்கவைத்துள்ளது. சென்னை அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் .

இந்த நிலையில் ,சி.எஸ்.கே. நிர்வாகம் என்னை ஏலத்தில் எடுக்கும் என நம்புகிறேன் என்று தீபக் சாஹர் தெரிவித்துள்ளார் .இது தொடர்பாக அவர் கூறியதாவது ,

2025 ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலத்தில் சி.எஸ்.கே.  நிர்வாகம் என்னை ஏலம் எடுப்பார்கள் என நம்புகிறேன். கடைசியாக நடைபெற்ற மெகா ஏலத்தில் என்னை அவர்கள் தக்க வைக்கவில்லை. ஆனால் எனக்காக பல முயற்சிகளை மேற்கொண்டு மீண்டும் சென்னை அணிக்குள் கொண்டு வந்தனர். இந்த வருடம் என்ன நடக்கபோகிறது என்பது தெரியவில்லை. ஆனால் என் திறமைக்கு இப்போது அதிக மதிப்பு கிடைக்கும் என்று எனக்கு தெரியும். என தெரிவித்துள்ளார் 

Tags:    

மேலும் செய்திகள்