பும்ராவை போல ஒரு வீரரை இதுவரை பார்த்தது இல்லை - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் ஆடி வருகிறது.

Update: 2024-12-17 07:02 GMT

Image Courtesy: AFP

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.

இந்த டெஸ்ட் தொடரில் தற்போது வரை பும்ரா 18 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 3-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் பும்ரா 6 விக்கெட் கைப்பற்றினார். கபில்தேவுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் 50 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த நிலையில் பும்ராவை போல ஒரு வீரரை இதுவரை பார்த்தது இல்லை என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான ஆலன் பார்டர் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

என்னால் பும்ராவை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் மால்கம் மார்ஷலுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால் நான் பும்ரா பந்துவீச்சை எதிர்கொண்டதில்லை. ஆனாலும், பும்ரா மிகவும் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். அவர் எப்போதாவதுதான் விக்கெட் எடுக்காமல் இருப்பார்.

அவர் மிகவும் வித்தியாசமானவர். விக்கெட் வீழ்த்தும் எல்லா நேரத்திலும் அவர் சிரிக்கிறார். அவரால் ஒரு பேட்ஸ்மேனை தொடர்ச்சியாக 3 முறை அவுட்டாக்கி விட்டு அனைத்து முறையும் சிரிக்க முடியும். அவரைப் போல் யாரையும் நான் பார்த்ததில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்