ஹாங் காங் சிக்சஸ் தொடர்; உத்தப்பா தலைமையில் களம் இறங்கும் இந்தியா

ஹாங் காங் சிக்சஸ் தொடருக்கான இந்திய அணி ராபின் உத்தப்பா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-12 06:11 GMT

Image Courtesy: PTI/ Twitter @robbieuthappa

புதுடெல்லி,

கடந்த ஏழு ஆண்டுகளாக ஹாங்காங் சிக்சஸ் தொடர் நடைபெறாமல் இருந்தது. புதுமையான கிரிக்கெட் விதிகளுடன் நடத்தப்பட்ட இந்த தொடர் தற்போது மீண்டும் திரும்ப நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியிலும் ஆறு வீரர்கள் மட்டுமே இடம்பெறுவார்கள். ஒவ்வொரு இன்னிங்சிலும் தலா ஐந்து ஓவர்கள் தான் போட்டி நடைபெறும். அது மட்டுமில்லாமல் ஐந்து வீரர்கள் விக்கெட் இழந்தால் ஆறாவது வீரர் சிங்கிளாகவே பேட்டிங் செய்யலாம்.

இறுதிப் போட்டியில் மட்டும் ஒரு ஓவருக்கு எட்டு பந்துகள் வீசப்படும். மேலும் விக்கெட் கீப்பரை தவிர மற்ற ஐந்து வீரர்களும் தலா ஒரு ஓவர் வீச வேண்டும். இதேபோன்று வைடு மற்றும் நோபால்களை வீசினால் இரண்டு ரன்கள் வழங்கப்படும். இந்தத் தொடரில் 12 அணிகள் பங்கு பெற இருக்கிறது.

பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட அணிகள் இந்த தொடரில் மோத இருக்கிறது. பாகிஸ்தான அணி ஏற்கனவே ஆறு வீரர்களை கொண்ட அணியை அறிவித்து விட்டது. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ராபின் உத்தப்பா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி விவரம்: ராபின் உத்தப்பா (கேப்டன்), கேதர் ஜாதவ், ஸ்டூவர்ட் பின்னி, மனோஜ் திவாரி, ஷபாஸ் நதீம், பாரத் சிப்லி, ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி (விக்கெட் கீப்பர்).

Tags:    

மேலும் செய்திகள்