ரிஷப் பண்ட் விக்கெட்டை விரைவில் வீழ்த்த நல்ல திட்டங்கள் உள்ளன - பேட் கம்மின்ஸ்

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது

Update: 2024-11-07 05:09 GMT

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் முக்கிய வீரராக இருப்பார் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரிஷப் பண்ட் குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் சும்மின்ஸ் கூறியதவாது ,

ரிஷப் பண்ட் போட்டியில் வேகமான மாற்றத்தை ஏற்படுத்துபவர். ஆஸ்திரேலியாவில் அவர் இறுதியாக விளையாடியபோது அது அவருக்கு நல்ல தொடராக அமைந்தது. அவர் களத்தில் இருப்பது எங்கள் அணிக்கு ஆபத்தானது என்று எங்களுக்கு தெரியும். எனவே பார்டர் - கவாஸ்கர் தொடரில் அவரின் விக்கெட்டை விரைவில் வீழ்த்த நாங்கள் முயற்சி செய்வோம். எங்களிடம் சில நல்ல திட்டங்கள் உள்ளன. என தெரிவித்துள்ளார் 

Tags:    

மேலும் செய்திகள்