துலீப் கோப்பை: மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ அணி சாம்பியன்

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி 2-வது இடத்தை பிடித்தது.

Update: 2024-09-22 15:42 GMT

image courtesy: twitter/@BCCIdomestic

அனந்தபூர்,

துலீப் கோப்பை தொடரின் 3-வது மற்றும் கடைசி ரவுண்ட் ஆட்டங்கள் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நடைபெற்றன. இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா 'ஏ' அணி, கெய்வாட் தலைமையிலான இந்தியா 'சி' உடன் மோதியது.

இதில் முதலில் ஆடிய ஏ அணி முதல் இன்னிங்சில் 297 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சி அணி முதல் இன்னிங்சில் 234 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

பின்னர் 63 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஏ அணி 286 ரன்களில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 73 ரன்னும், ஷஷ்வாத் ராவத் 53 ரன்னும் எடுத்தனர். இந்தியா சி தரப்பில் அதிகபட்சமாக கவுரவ் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துரத்திய இந்தியா சி அணி 217 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா ஏ அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா சி தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 111 ரன்கள் அடித்தார். இந்தியா ஏ அணியில் அதிகபட்சமாக தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அந்த வகையில் மொத்தமாக விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற இந்தியா ஏ அணி 2024 துலீப் கோப்பையை வென்று சாதனை படைத்தது. மறுபுறம் கடைசிப் போட்டியில் சொதப்பிய இந்தியா சி அணி 2வது இடத்தை பிடித்தது.

அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணி மூன்றாம் இடத்தையும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணி நான்காவது இடத்தையும் பிடித்தன.

Tags:    

மேலும் செய்திகள்