ஒரு காலத்தில் இலங்கை அணி எப்படி விளையாடியது தெரியுமா..? முன்னாள் கேப்டன்

இங்கிலாந்து தற்சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவதாக அரவிந்த டி சில்வா பாராட்டியுள்ளார்.

Update: 2024-08-17 20:36 GMT

image courtesy: AFP

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஒரு காலத்தில் இலங்கை அணி உலகின் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் மிகவும் தைரியமாக விளையாடியதாக முன்னாள் கேப்டன் அரவிந்த டி சில்வா தெரிவித்தார். ஆனால் தற்போதைய இலங்கை வீரர்கள் அப்படி விளையாடுவதில்லை என்று அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் இங்கிலாந்து தற்சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவதாக அவர் பாராட்டியுள்ளார். 

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "எங்கள் காலத்தில் இருந்த இலங்கை அணி வரலாற்றில் வேறு எந்த அணியும் இப்படி விளையாடியதில்லை என்பது போல் விளையாடியது. எங்களுக்கு ஒரு அடையாளம் இருந்தது. இலங்கை கிரிக்கெட்டில் வீரர்கள் விளையாடிய விதம் மக்களுக்கு தெரியும். அதை மற்ற அணிகளும் பின்பற்ற விரும்பின. ஆனால் தற்சமயத்தில் அது எங்கள் அணியிடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தற்சமயத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் விளையாடும் விதத்தால் நானும் மகிழ்ச்சியடைகிறேன்.

அவர்கள் பேட்டிங் அல்லது பவுலிங் ஆகிய எதுவாக இருந்தாலும் மிகவும் அட்டாக் செய்து விளையாடுகின்றனர். இங்கிலாந்து தங்களுடைய அணுகுமுறையை மிகவும் நேர்மறையாக பின்பற்றுகிறது. அது அவர்களுக்கு உதவியும் செய்கிறது. அதனால் இங்கிலாந்தில் வெற்றி பெறுவது மிகவும் கடினம். ஆனால் அது சாத்தியமற்றது கிடையாது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்