2026 டி20 உலகக்கோப்பையில் இடம்பெற ரிஷப் பண்ட்-க்கு இந்திய முன்னாள் வீரர் அறிவுரை

ரிஷப் பண்ட் தற்போதைய இந்திய டி20 அணியின் அங்கமாக இல்லை என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.;

Update:2025-03-17 10:46 IST
2026 டி20 உலகக்கோப்பையில் இடம்பெற ரிஷப் பண்ட்-க்கு இந்திய முன்னாள் வீரர் அறிவுரை

image courtesy: PTI

மும்பை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடப்பு ஐ.பி.எல். சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது தலைமையில் இந்த முறை லக்னோ அணி எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் இன்னும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடிக்கவில்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். எனவே 2026 டி20 உலகக்கோப்பையில் ரிஷப் பண்ட் வாய்ப்பு பெறுவது கடினம் என்று அவர் கூறியுள்ளார். ஒருவேளை அந்த வாய்ப்பை பிடிக்க வேண்டுமெனில் இந்த ஐ.பி.எல். தொடரில் அவர் அசத்த வேண்டுமென ஆகாஷ் சோப்ரா அறிவுறுத்தியுள்ளார்

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ரிஷப் பண்ட்-க்கு பெரிய வாய்ப்பு இருக்கிறது. அவர் தற்போது இந்திய டி20 அணியில் அங்கமாக இல்லை. அவரைப் போன்ற வலுவான வீரர் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து அசத்தாதது ரசிகர்களுக்கும் ஆச்சரியமாகவே இருந்து வருகிறது. எனவே இது உங்களுக்கான வருடம் சார். இங்கே வந்து நிறைய ரன்கள் அடித்து அனைவரையும் அதிர விடுங்கள்.

அவர் எந்த வரிசையில் விளையாடுவார் என்ற கேள்வியும் இருக்கிறது. ஆனால் இங்கே சஞ்சு சாம்சன் உங்களுக்கு போட்டியாக இல்லை. கேப்டனாக இருப்பதால் நீங்கள் உங்களுடைய இடத்தை சரியாக உருவாக்கிக் கொள்ள முடியும். உங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தால் 3-வது இடத்தில் விளையாட வாருங்கள். மற்ற அனைத்து இடது கை பேட்ஸ்மேன்களை 4, 5, 6வது இடங்களில் களம் இறக்க வையுங்கள்.

இங்கே உங்களுக்கு 2 வேலைகள் இருக்கின்றன. முதலில் உங்களது அணியை முன்னோக்கி வழி நடத்துங்கள். அதை சரியாக செய்தால் கேப்டனாக உங்களுக்கு நிறைய அங்கீகாரம் கிடைக்கும். 2-வதாக நீங்கள் ரன்கள் அடித்தால் இந்திய டி20 அணியில் வாய்ப்பு வரும். தற்போதைய இந்திய டி20 அணி 2026 உலகக்கோப்பையில் விளையாடும் என்று நான் நினைக்கவில்லை. அந்த அணிக்கான தேர்வுகள் மாறக்கூடும். எனவே அதை முன்னோக்கி செல்லும் நேரத்தில் ஐ.பி.எல். வீரர்களை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்காற்றும். அதனால் ரிஷப் பண்ட்-க்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக நான் பார்க்கிறேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்