பரபரப்பான கட்டத்தில் பாக்சிங் டே டெஸ்ட்: 2வது இன்னிங்சில் ஆஸி. 53/2
பாக்சிங் டே டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
மெல்போர்ன்,
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4வது டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கியது. பாக்சிங் டே என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 369 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்நிலையில், 4ம் நாளான இன்று 105 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களான சாம் 8 ரன்னிலும், குவாஜா 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
தற்போது 4ம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 158 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.