4வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

4வது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது

Update: 2024-09-27 03:13 GMT

லார்ட்ஸ் ,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2 வெற்றிகளும், இங்கிலாந்து 1 வெற்றியும் பெற்றுள்ளன.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 4வது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது . இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு போட்டி தொடங்குகிறது .

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற ஆஸ்திரேலியா தீவிரம் காட்டும். அதேபோல இந்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்