போர் நிறுத்தத்தை செயல்படுத்தினால் மட்டுமே.. பணய கைதிகள் விடுதலை - ஹமாஸ் திட்டவட்டம்

இஸ்ரேலிய தாக்குதல்களில் உள்ளூர் நிருபர் ஒருவர் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாக மருத்துவதுறையினர் தெரிவித்தனர்.;

Update:2025-03-16 07:26 IST
போர் நிறுத்தத்தை செயல்படுத்தினால் மட்டுமே.. பணய கைதிகள் விடுதலை - ஹமாஸ் திட்டவட்டம்

காசா,

இஸ்ரேல் தனது போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்தினால் மட்டுமே, ஒரு அமெரிக்க-இஸ்ரேலியரையும் மற்ற நான்கு பணயக்கைதிகளின் உடல்களையும் விடுவிப்போம் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான முதற்கட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து 2 வாரங்கள் ஆகும் நிலையில், போர் நிறுத்தத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து கத்தார் நாட்டின் தோஹாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் பணய கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க வம்சாவளியை சேர்ந்த இஸ்ரேலிய ராணுவ வீரர் எடான் அலெக்சாண்டர் என்பவரை விடுதலை செய்யவும், பணய கைதியாக பிடித்து செல்லப்பட்டு பின்னர் உயிரிழந்த 4 வெளிநாட்டு பணய கைதிகளின் உடல்களை ஒப்படைக்கவும் ஹமாசிடம் கோரப்பட்டது. அதை ஹமாசும் ஏற்றுக்கொண்டது.

இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் செயல்படுத்தினால் மட்டுமே அமெரிக்க பணய கைதியையும், 4 வெளிநாட்டு பணய கைதிகளின் உடல்களையும் ஒப்படைப்போம் என ஹமாஸ் தற்போது தெரிவித்துள்ளது. அதுமட்டும் இன்றி விடுவிக்கப்படும் பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் அதிக எண்ணிக்கையிலான பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்றும் ஹமாஸ் வலியுறுத்தி உள்ளது.

இதற்கிடையில், காசா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களில் உள்ளூர் நிருபர் ஒருவர் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாக மருத்துவத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்