உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டாலருக்கு ஆயுத உதவி - அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

Update: 2024-11-19 22:35 GMT

வாஷிங்டன்,

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 1001வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவரும் நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாததால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

அதேவேளை, தொலைதூரம் சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை ரஷியா மீது பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் பைடன் அனுமதி வழங்கியுள்ளார். இதையடுத்து, அணு ஆயுத பயன்பாடு தொடர்பான கொள்கைகளை ரஷியா மாறியமைத்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 275 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் ராணுவ டாங்கிகள், ஏவுகணைகள் உள்பட அதிநவீன ஆயுதங்களும் அடக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரஷியாவுடனான போர் தொடங்கியது முதல் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுத உதவி 51 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்