டிரம்ப் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்கிறார் இஸ்ரேல் பிரதமர்

பிப்.4-ம் தேதி இரு நாட்டு தலைவர்களும் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசுவார்கள் என்று கூறப்படுகிறது.;

Update:2025-01-30 00:12 IST
டிரம்ப் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்கிறார் இஸ்ரேல் பிரதமர்

FILEPIC

வாஷிங்டன்,

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது இஸ்ரேல் கடந்த 15 மாதங்கள் போர் தொடுத்து வந்தது. இதில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இதனிடையே அமெரிக்கா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக காசாவில் கடந்த 19-ந் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.இந்த போர் நிறுத்தத்தை தொடர வேண்டுமென அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிரம்ப், இஸ்ரேல் மற்றும் ஹமாசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கு வருமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகுவுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று பெஞ்சமின் நேட்டன்யாகு அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகிற 4-ந் தேதி வெள்ளை மாளிகையில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் பதவியேற்றதற்கு பிறகு அமெரிக்கா செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர் இஸ்ரேல் பிரதமர் நேட்டன்யாகு என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்