பிலிப்பைன்சில் சீனாவுக்கு உளவு பார்த்த 5 பேர் கைது

சீனாவை சேர்ந்த சிலர் தாங்கள் தைவான் நாட்டவர்கள் என்று கூறிக்கொண்டு பிலிப்பைன்சுக்கு சுற்றுலா சென்று உள்ளனர்.;

Update:2025-01-31 23:51 IST
பிலிப்பைன்சில் சீனாவுக்கு உளவு பார்த்த 5 பேர் கைது

மணிலா,

தென்சீனக்கடல் விவகாரத்தில் பிலிப்பைன்ஸ்-சீனா இடையே சமீப காலமாக பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே சீனாவைச் சேர்ந்த சிலர் தங்களை தைவான் நாட்டவர்களாக கூறிக்கொண்டு பிலிப்பைன்சுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். ஆனால் அங்குள்ள ஸ்ப்ட்ராட்லி தீவு அருகே சூரிய சக்தியில் இயங்கும் கேமராக்களை நிறுவி அவர்கள் கண்காணித்தனர்.

பின்னர் சந்தேகத்தின்பேரில் போலீசார் அவர்களது ஆவணங்களை சோதனை செய்தபோது அவர்கள் அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உளவு பார்த்ததாக கூறி 5 சீனர்களை பிலிப்பைன்ஸ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்