தலையில் சிசிடிவி கேமராவுடன் உலா வரும் இளம்பெண்
பாகிஸ்தானில் இளம்பெண் ஒருவர் தனது தலையில், சிசிடிவி கேமராவுடன் உலா வரும் காட்சிகள் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
இஸ்லாமாபாத்,
நவீன தொழில்நுட்பம் காரணமாக மூன்றாவது கண் எனப்படும் சிசிடிவி கேமரா பல வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு உறுதுணையாக உள்ளது. கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிசிடிவி கேமரா முக்கிய பங்கு ஆற்றி வருகிறது.
ஆனால், சிசிடிவியை இப்படியும் பயன்படுத்த முடியுமா என நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு, பாகிஸ்தானில் இளம்பெண்ணின் தந்தை ஒருவர், தனது மகளின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராவை பயன்படுத்தியுள்ளார்.
அதுவும், 24x7 என்ற ரீதியில் அந்த பெண்ணின் தலையிலேயே 360 டிகிரி கோணத்தில் படம் பிடிக்கும் சிசிடிவியை மாட்டியுள்ளார். அவரும், எந்தவொரு சலனுமும் இன்றி சிசிடிவி தலையுடனேயே உலா வருகிறார்.
தனது மகளுக்கு எந்த விதத்திலும் ஆபத்து நெருங்கி விட கூடாது என்பதற்காகவே இந்த செயலில் அவர் இறங்கியுள்ளதாக அந்த இளம்பெண்ணே கூறியுள்ளார். எனது தந்தை எது செய்தாலும் அதை முழு மனதுடன் ஏற்பேன் என்று, அந்த இளம்பெண் கூறியுள்ளார். பாதுகாப்பு என்ற பெயரில் இளம்பெண்ணின் தலையில் சிசிடிவை மாட்டி விட்டது எல்லாம் கொஞ்சம் அதிகம்தான் என்று சமூகதளவாசிகள் கூறுகின்றனர்.