பாகிஸ்தானில் போலியோவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39-ஆக உயர்வு

போலியோ சொட்டு மருந்து வழங்குவது மதத்துக்கு எதிரானது என்று அந்நாட்டின் சில பயங்கரவாத அமைப்புகள் கூறி வருகின்றன.

Update: 2024-10-21 00:10 GMT

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மேலும் இரு சிறுவா்களுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டில் மட்டும் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது.

இத்துடன், பலூசிஸ்தானில் 20 போ், சிந்து மாகாணத்தில் 12 போ், கைபா் பக்துன்கவாவில் ஐந்து போ், பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாதில் தலா ஒருவரிடம் இந்த ஆண்டில் போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பளிப்பது மதத்துக்கு எதிரானது என்று அந்த நாட்டின் தெஹ்ரீக்-இ-தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கூறி வருகின்றன. இதன் காரணமாக, போலியோ தடுப்பு மருந்துப் பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் படையினரைக் குறிவைத்து அடிக்கடி பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமானவா்கள் உயிரிழந்தும் வருகின்றனா்.

Tags:    

மேலும் செய்திகள்