அணு ஆயுத உற்பத்தி மையத்தை ஆய்வு செய்த வடகொரிய அதிபர்

அணு ஆயுத உற்பத்தி மையத்தை வடகொரிய அதிபர் ஆய்வு செய்தார்.;

Update:2025-01-29 09:07 IST
அணு ஆயுத உற்பத்தி மையத்தை ஆய்வு செய்த வடகொரிய அதிபர்

பியோங்யாங்,

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் தாண்டும் அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வருகிறது. மேலும், தங்கள் வசம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையிலும் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், வடகொரியாவில் உள்ள அணு ஆயுத உற்பத்தி மையத்தை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அணு ஆயுத உற்பத்திக்கு தேவையான யுரேனியம் செறிவூட்டலை மேலும் அதிகரிக்க அதிகாரிகளுக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்