அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக சீனாவில் கைது செய்யப்பட்ட 5 பேர் விடுவிப்பு

அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக சீனாவில் கைது செய்யப்பட்ட 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.;

Update:2025-03-26 06:33 IST
அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக சீனாவில் கைது செய்யப்பட்ட 5 பேர் விடுவிப்பு

பீஜிங்,

சீன தலைநகர் பீஜிங்கில் அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் சிலர் அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதன்பேரில் கடந்த 2023-ம் ஆண்டு 5 சீன தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து சீனாவில் இருந்த அந்த நிறுவனத்தின் அனைத்து கிளைகளும் மூடப்பட்டது. பின்னர் உளவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் அவர்கள் உளவு பார்த்ததற்கான போதிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே அந்த 5 பேரும் தற்போது விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்