தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு
தஜிகிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.6 ஆக பதிவாகி இருந்தது.
துஷான்பே,
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானின் பாழிர் மலைத் தொடரில், ஜீரீம் சாஷமா வெந்நீர் ஊற்றுக்கு அருகே நேற்று இரவு 11.01 நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தஜிகிஸ்தான் இடையே உள்ள சர்வதேச எல்லைக்கு அருகே 80 கி.மீ. ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் இன்று தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.