இலங்கை அதிபராக இன்று பதவியேற்கிறார் அனுரா குமார திசநாயகே

கொழும்பில் உள்ள அதிபா் செயலகத்தில் இலங்கை அதிபராக அனுரா குமார திசநாயகே திங்கள்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-09-22 23:20 GMT

கொழும்பு,

இலங்கை அதிபா் தோ்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அனுரா குமார திசாநாயகே (56) வெற்றி பெற்றாா். எதிா்க்கட்சித் தலைவா் சஜீத் பிரேமதாச இரண்டாவது இடத்தைப் பெற்ற நிலையில், தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்கே 3-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டாா்

மேலும், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் பெரும்பான்மை (50 சதவீதத்துக்கும் அதிகம்) கிடைக்காத நிலையில், இலங்கை தோ்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக 2-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றியாளராக அனுரா குமார திசாநாயகே தோ்வு செய்யப்பட்டாா்.. கொழும்பில் உள்ள அதிபா் செயலகத்தில் இலங்கை அதிபராக அனுரா குமார திசாநாயகே திங்கள்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்