சென்னையில் பரவலாக மழை
பெஞ்சல் புயல் 12 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.;
சென்னை,
வங்கக் கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் இன்று மாலை கரையக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலின் தாக்கம் காரணமாக சென்னையில் நேற்று விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. நள்ளிரவில் பல இடங்களிலும் திடீரென கனமழை பெய்தது. இன்று அதிகாலை 1 மணியளவில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. பட்டினப்பாக்கம், அடையாறும், திருவான்மியூர், தி.நகர், கிண்டி, சைதாப்பேட்டை நந்தனம் என பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.