இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-15 12:22 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வட திசை நோக்கி நகர்வதால் கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரவு 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கடலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கரூர், தேனி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்