காற்றழுத்த தாழ்வுமண்டலம் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது

காற்றழுத்த தாழ்வுமண்டலம் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .

Update: 2024-10-17 02:03 GMT

சென்னை,

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது .

இந்த நிலையில் , தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . மேற்கு வட மேற்கு திசையில் வட தமிழ்நாடு ஆந்திர கடற்கரை பகுதிகளில், புதுச்சேரி நெல்லூருக்கு இடையே அதிகாலை 4.30 மணிக்குசென்னைக்கு வடக்கே கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் பகுதியின் மேல் தற்போது நிலவி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது . 

Tags:    

மேலும் செய்திகள்