சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு இன்று மீண்டும் ரெட் அலர்ட்

வேலூர் உட்பட 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-16 09:31 GMT

கோப்புப்படம்

சென்னை,

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக, நேற்றிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு அலர்ட்

வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரியில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் அலர்ட்

திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை (17-10-2024)

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கன மழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்