கோவையில் வெளுத்து வாங்கும் கனமழை

கோவையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.;

Update:2024-10-22 23:46 IST

கோவை,

தென் தமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். அதேபோல், கனமழையால் ஒருசில பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு கார்கள், பைக்குகள் அடித்து செல்லப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்