சென்னையில் பனிமூட்டத்துடன் விட்டுவிட்டு மழை
சென்னையில் பனிமூட்டத்துடன் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.;
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயல் அதற்கடுத்த இரு தினங்களில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய, தமிழக கடலோரபகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. பனிமூட்டத்துடன் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
எழும்பூர், சென்டிரல், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பனிமூட்டத்துடன் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.