தமிழகத்தில் இயல்பை விட கூடுதலாக வடகிழக்கு பருவமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது மேலும் வரும் 23-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் , தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை, இயல்பை விட 3% கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழ்நாடு மற்றும் புதுவையில் 01.10.2024 முதல் 17.11.2024 வரை 298.7 (மி மீ) மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 288.9 (மி மீ) தான் பெய்யும். ஆகவே தற்போது வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 3% அதிகமாக பெய்துள்ளது.மேலும், சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை, இயல்பை விட 5% கூடுதலாக பெய்துள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.