சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று "ரெட் அலர்ட்"

சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-15 08:47 GMT

கோப்புப்படம்

சென்னை,

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைய இருக்கிறது. இதன் எதிரொலியாக பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் நாளை டெல்டா மாவட்டங்களிலும், நாளை மறுநாள் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிக கனமழை இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழை நீடிக்கும் என்றும், ஒரு சில பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதிகனமழை பெய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரெட் அலர்ட்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு

ஆரஞ்சு அலர்ட்

வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை

மஞ்சள் அலர்ட்

திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை

Tags:    

மேலும் செய்திகள்