அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் - வானிலை மையம் தகவல்

வரும் 19ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-03-15 14:20 IST
அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் - வானிலை மையம் தகவல்

கோப்புப்படம்

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,

இன்று (15-03-2025) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை (16-03-2025) மற்றும் நாளை மறுநாள் (17-03-2025): தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

18-03-2025 மற்றும் 19-03-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20-03-2025 மற்றும் 21-03-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின்படி,இன்று முதல் (15-03-2025) நாளை மறுநாள் (17-03-2025) வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். 18,19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.

15-03-2025 முதல் 19-03-2025 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2-3 டிகிரி அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (15-03-2025) மற்றும் நாளை (16-03-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்