12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-11-10 10:58 GMT

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 16-ம் தேதி வரை ஒருசில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்