அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, கோவை உள்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-21 02:02 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த 15-ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 15-ந் தேதி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக கன மழை பெய்தது. இந்த சூழலில் இன்றும், நாளையும் வடதமிழக கடலோரப் பகுதிகளையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி

சென்னை

மயிலாடுதுறை

திருவாரூர்

நாகப்பட்டினம்

விழுப்புரம்

கடலூர்

புதுக்கோட்டை

தஞ்சாவூர்

செங்கல்பட்டு

திருவண்ணாமலை

வேலூர்

திருப்பத்தூர்

திருவள்ளூர்

காஞ்சிபுரம்

ராணிப்பேட்டை

கோவை

திருப்பூர்

ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்