வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது
நாளை டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.
சென்னை,
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது,
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை – தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 4 நாட்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். நாளை மறுநாள் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்.
சில நேரங்களில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். என தெரிவித்தார்.