தமிழகத்தில் 10 இடங்களில் இன்று சதமடித்த வெயில்
தமிழகத்தில் 10 இடங்களில் இன்று 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.;
சென்னை,
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சமீப காலமாக கடுமையான வெயில் வாட்டி எடுத்து வருகிறது. சில இடங்களில் வெப்பநிலை சராசரியாக 10 டிகிரி பாரன்ஹீட்டை விட அதிகமாக பதிவாகி வருகிறது.
அந்த வகையில், இன்று தமிழகத்தில் 10 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
அதே சமயம் ஈரோடு மற்றும் சேலத்தில் 101.12 டிகிரி, கரூர் பரமத்தி மற்றும் திருப்பத்தூரில் 102.2 டிகிரி, திருச்சியில் 100.22 டிகிரி, திருத்தணியில் 100.4 டிகிரி, தருமபுரி மற்றும் மதுரையில் 100 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னையிலும் இன்று வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 101.66 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.