நெல்லையில் கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.;

Update:2025-04-09 17:35 IST

நெல்லை மாவட்டம், கிருஷ்ணாபுரம், ஜாண்டிவைன் சிட்டியைச் சேர்ந்த முருகன் மகன் வள்ளிநாயகம் (வயது 34) சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது சிவந்திபட்டி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், வள்ளிநாயகம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று (08.04.2025) பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்