ஓடும் ரெயிலில் பயணியிடம் செல்போன் பறித்த இளைஞர் கைது
சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்ட ரெயிலில் செல்போன் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.;
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுள்ளது. அந்த ரெயிலில் பயணி கதவு அருகே அமைந்து செல்போனை பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது, குச்சியால் தட்டி செல்போனை இளைஞர் பறித்துச்சென்றார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், பயணியின் செல்போனை பறித்துச்சென்ற பரத் குமார் (வயது 19) என்ற இளைஞரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து செல்போன் மீட்கப்பட்டுள்ளது. மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.