கர்ப்பமாக்கிவிட்டு காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை

கர்ப்பமாக்கிவிட்டு காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2025-03-23 09:20 IST
கர்ப்பமாக்கிவிட்டு காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை

கடலூர்,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ம.கொளக்குடி கிராமம் எல்.இ.பி. நகரை சேர்ந்தவர் இளங்கோவன் மனைவி மணிமேகலை. இவர்களது மகள் பூமிகா (வயது 24). இளங்கோவன் இறந்து விட்ட நிலையில் மணிமேகலை கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இதனால் பூமிகா தனது அண்ணன், அக்காளுடன் ம.கொளக்குடியில் வசித்து வந்தார்.

பூமிகாவும், அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய வாலிபர் ஒருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் நெருங்கி பழகியதால் பூமிகா 5 மாத கர்ப்பமாக இருந்தார். இதுகுறித்து பூமிகா தனது காதலனிடம் தொிவித்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார்.

இதனால் மனமுடைந்த பூமிகா, கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் தங்கி வேலை பார்க்கும் தனது தாய் மணிமேகலை வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூமிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கேரளா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்