சென்னையில் போதைப்பொருள் விற்ற வாலிபர் கைது

வாலிபரிடம் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.;

Update:2025-04-15 05:56 IST

சென்னை,

சென்னை அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி ஆவடி அடுத்த கோணமேடு, பிள்ளையார் கோவில் தெரு சந்திப்பு அருகே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி இருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அவரிடம் சோதனை செய்தபோது 9 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.

அதை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், மேற்கு வங்காள மாநிலம் மைதா மாவட்டம் பெட்ராபாத் பகுதியைச் சேர்ந்த மொஜமல் ஹூக்(வயது 21) என்பதும், மேற்கு வங்காளத்தில் இருந்து ஹெராயினை சென்னை கடத்தி வந்து ஆவடி, அயப்பாக்கம், அண்ணனூர் பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரிந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் மொஜமல் ஹூக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்