துணை முதல்-அமைச்சர் பெயரை தவறாக பயன்படுத்தி மோசடி - பெண் கைது
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை தவறாக பயன்படுத்து மோசடியில் ஈடுப்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.;

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவரிடம் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை தவறாக பயன்படுத்து வேலை வாங்கித் தருவதாக கூறி பெண் ஒருவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த மோசடியில் ஏமாற்றப்பட்ட மாற்றுத்திறனாளி போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சேலத்தை சேர்ந்த வித்யா என்ற பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.