விமர்சனங்களை எதிர்கொள்வோம் தக்க பதிலடி கொடுப்போம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

மக்கள் விரோத ஆட்சியை நடத்தி விட்டு திராவிட மாடல் என ஏமாற்றுகிறார்கள் என்று தவெக தலைவர் விஜய் கூறினார்.

Update: 2024-10-27 14:44 GMT

விழுப்புரம்,

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது:-

பகுத்தறிவு புரட்சியாளர் தந்தை பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர். பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப் போவதே இல்லை. எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதே எங்களுடைய நிலைப்பாடு. பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனை உள்ளிட்ட பெரியார் சொன்ன இவை அனைத்தையும் நாங்கள் முன்னெடுக்கப் போகிறோம்.

மக்கள் விரோத ஆட்சியை நடத்தி விட்டு திராவிட மாடல் என ஏமாற்றுகிறார்கள். அவங்கள் பாசிச ஆட்சி என்றால், நீங்கள் பாயச ஆட்சியா?. பெரியார், அண்ணா பெயரை சொல்லி, திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப ஆட்சியை நடத்துகிறார்கள். அவர்களும் நம்முடைய கொள்கை எதிரி தான். வீடு, உணவு, வேலை இவை மூன்றுமே அடிப்படை தேவை இதை கொடுக்க முடியாத அரசு, இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன? என்று கூறினார்.

தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-

"திமுக ஒரு ஆலமரம். காய்த்த மரம்தான் கல்லடி படும்; யார் கல்லெறிந்தாலும் தாங்கிக்கொள்ளும் சக்தி திமுகவுக்கு உள்ளது. வார்த்தைக்கு.. வார்த்தை பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதேபோல் யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவை தான் விமர்சிப்பார்கள். விமர்சனங்களை எதிர்கொள்வோம் தக்க பதிலடி கொடுப்போம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்