தனி விமானத்தில் ஜார்கண்ட் புறப்பட்ட உதயநிதி ஸ்டாலின்

ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் ராஞ்சி புறப்பட்டார் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Update: 2024-11-28 09:25 GMT

சென்னை,

ஜார்கண்டில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தது. இதில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் நான்கு இடங்களிலும் வென்றது. இதன்படி இந்தியா கூட்டணி 56 இடங்களிலும், பா.ஜ.க. கூட்டணி 24 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.

இதையடுத்து, அம்மாநில கவர்னர் சந்தோஷ் காங்வாரை சந்தித்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கவர்னரின் ஒப்புதலை அடுத்து, ஜார்கண்டில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் சோரன், இன்று மாலை முதல்-மந்திரியாக பதவியேற்கிறார். அவருக்கு கவனர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்நிலையில் இந்த பதவியேற்பு விழாவில், இந்தியாகூட்டணி தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் இருந்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஞ்சிக்கு புறப்பட்டார். ஜார்கண்ட் முதல்-மந்திரி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு இன்றிரவே சென்னை திரும்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் ராகுல்காந்தி, சரத் பவார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்