இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025

Update:2025-03-27 09:14 IST
Live Updates - Page 2
2025-03-27 09:44 GMT

இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.

2025-03-27 09:42 GMT

நாட்டில் மொத்தம் 25,000 கி.மீ நீளமுள்ள இருவழிச் சாலைகள் ரூ.10 லட்சம் கோடியில் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்படும் என்றும், இது சாலைகளில் ஏற்படும் விபத்துகளைக் கணிசமாகக் குறைக்க உதவும் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளார்.

2025-03-27 08:32 GMT

சென்னை வெளிவட்ட சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் ஏப்ரல் 1ஆம் தேதி அமலாகிறது.

2025-03-27 08:27 GMT

ஒற்றைத்தலைமை வந்தால் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெறுவேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் ஒரு தேர்தலில்கூட வெற்றி பெறவில்லை. பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமி அவராகவே விலக வேண்டும். இல்லாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார் என்று ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக கூறினார்.

2025-03-27 08:15 GMT

விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன்' படத்தை வெளியிட விதித்த தடையை 4 வாரங்களுக்கு நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

2025-03-27 08:07 GMT

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2025-03-27 07:43 GMT

ஜூன் 2-ம் தேதி இசைஞானி இளையராஜாவின் திரையிசை பயணத்தின் 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி பாராட்டு விழா நடத்தப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2025-03-27 07:18 GMT

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டமன்றத்தில் 15-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்கு பிறகு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது புதுச்சேரி அரசு.

2025-03-27 06:16 GMT

வக்ப் திருத்த சட்ட முன்வடிவுக்கு எதிரான முதல்-அமைச்சரின் தீர்மானத்துக்கு அதிமுக, பாமக ஆதரவு தெரிவித்துள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது.

2025-03-27 05:55 GMT

1-8 வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு வினாத்தாள் கசிந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்