இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-03-2025

Update:2025-03-23 08:37 IST
Live Updates - Page 2
2025-03-23 09:50 GMT

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

2025-03-23 09:27 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருமண நிச்சயதார்த்தத்திற்கு சிலர் வேனில் சென்றுள்ளனர். அப்போது வேனின் டயர் வெடித்து உள்ளது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்தது. இதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

2025-03-23 07:32 GMT

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

2025-03-23 06:43 GMT

நெல்லை முன்னாள் எஸ்.ஐ. கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

நெல்லை முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) ஜாகீர் உசைன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு உதவியதாக பீர் முகமது என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2025-03-23 06:17 GMT

சென்னை - மும்பை போட்டி: மெட்ரோ, பஸ்களில் இலவச பயணம்

சென்னை, மும்பை இடையே சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் போட்டியை காண செல்லும் ரசிகர்கள் மாநகர பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து மெட்ரோ ரெயிலிலும், மாநகர பஸ்களிலும் இலவசமாக பயணிக்கலாம்

2025-03-23 05:45 GMT

மதுரையில் ரவுடி வெட்டிக்கொலை; தனிப்படைகள் அமைப்பு

மதுரையில் ரவுடி காளிஸ்வரன் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

2025-03-23 05:42 GMT

தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2025-03-23 05:26 GMT

 பணத்திற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி

வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணத்திற்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்