மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் உள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மதுரை பாலமேட்டில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை தொடங்கி நடந்து வருகின்றன. 1,100 காளைகள், 910 வீரர்கள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டியை 10 சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 50 முதல் 70 வரையிலான வீரர்கள் போட்டியில் விளையாடுவார்கள். பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
போட்டியில் முதல் இடம் பிடிக்கும் காளைக்கு பரிசாக டிராக்டர் மற்றும் முதல் இடம் பிடிக்கும் வீரருக்கு பரிசாக கார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, மாடுபிடி வீரர்களுக்கு டி.வி., பிரிட்ஜ், பீரோ, சைக்கிள், பைக், 2 சக்கர வாகனங்கள், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
இங்கிலாந்தில் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் அரசில் லஞ்ச ஒழிப்பு துறை மந்திரியாக இருந்த துலிப் சித்திக் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
வங்காளதேச முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனாவின் மருமகளான சித்திக், வங்காளதேசத்தில் நடந்து வரும் நிதி மோசடி தொடர்பான விசாரணையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதனால், அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது. இது இங்கிலாந்து பிரதமருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.