இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 05-02-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
மீனவர்கள் கைது விவகாரத்தை கண்டித்து திமுக எம்.பி.கள் நாளை மறுநாள் (பிப்.07) நாடாளுமன்ற வளாகம் முன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலக கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் வீராங்கனை திரிஷா போட்டி நாயகியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.1 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்து உள்ளார்.
டெல்லி சட்டசபையின் 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று நடந்த வாக்குப்பதிவு மாலை 6மணியுடன் நிறைவு பெற்றது.
டெல்லி சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிற்பகல் 5 மணி நிலவரப்படி 64.02 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
டெல்லியில் தி.மு.க மாணவரணி சார்பில் நாளை (பிப். 6) நடக்கும் யுஜிசிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ், திமுக எம்.பி.க்கள் பங்கேற்க உள்ளதாக தி.மு.க மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கூறியுள்ளார்.
பாமக மூத்த தலைவரான மறைந்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை மற்றும் மருமகன் மனோஜ் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில் 21 சமூகநீதி போராளிகளுக்கு மணி மண்டபம் அமைத்ததற்கு தங்களது நன்றி தெரிவித்தனர்.
டெல்லியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் ஏஐ செயலிகளை பயன்படுத்தக்கூடாது என்று மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.63 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.