தென்பெண்ணை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு - கடலூரில் ஊருக்குள் புகுந்த வெள்ளம்

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-02 01:26 GMT

திருவண்ணாமலை,

பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலையில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், தொடர் கனமழையால் சாத்தனூர் அணை வேகமாக நிரம்பியது. மொத்த நீர்மட்டமான 118 அடியை எட்டியதால் பாதுகாப்பு கருதி தற்போது சாத்தனூர் அணையில் இருந்து 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலூரில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. ஆற்றின் கரையோரம் இருக்கும் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். கடலூர் ஆட்சியர் அலுவலம், வெளிச்செமண்டலம், கண்டைக்காடு, தாழங்குடா உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்தது. தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருக்கோவிலூர் - விழுப்புரம் இடையேயான சாலையில் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் உள்ளிட்ட கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்