'பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை' - ஈரோடு எஸ்.பி. எச்சரிக்கை

பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஈரோடு எஸ்.பி. எச்சரித்துள்ளார்.

Update: 2024-10-20 07:23 GMT

ஈரோடு,

ஊசி மூலம் போதை மருந்தை உடலில் செலுத்திக் கொள்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஜவஹர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;-

"பள்ளி மாணவர்களை குறிவைத்து போதை தரக்கூடிய புகையிலைப் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். அவை நல்ல வாசனையுடன், இனிப்பான சுவையுடன் இருக்கும். இது மாணவர்களை போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது.

ஈரோட்டில் இதுவரை 11 ஆயிரத்து 271 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஊசி மூலம் போதை மருந்தை உடலில் செலுத்திக் கொள்பவர்களுக்கு ரத்தம் மூலமாக பரவக்கூடிய ஹெபாடிடிஸ், எச்.ஐ.வி. உள்ளிட்ட நோய்கள் பரவுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்