27 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு

போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற கொள்ளையனை காவல் ஆய்வாளர் சுட்டுப் பிடித்தார்.;

Update:2025-03-20 08:38 IST
27 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு

சிதம்பரம் அருகே 27 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையனை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரில் 10 சவரன் நகை, லேப்டாப், ரூ.50,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்ற கொள்ளையனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் திருடிய நகைகளை சித்தாலபாடி சாலை ஓரம் முட்புதரில் பதுக்கி வைத்திருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் நகைகளை மீட்க சென்றனர். அப்போது, கொள்ளையன் ஸ்டீபன் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதையடுத்து தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையனை காவல் ஆய்வாளர் அம்பேத்கர், கால் முட்டியில் சுட்டுப் பிடித்தார்.

இதில் காயமடைந்த ஸ்டீபனை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஸ்டீபன் மீது தமிழகம் முழுவதும் 27 கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்