மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: சட்டமுன்வடிவு - நாளை தாக்கல்
சட்ட முன்வடிவை நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார்.;

சென்னை,
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட முன்வடிவை, நாளை (புதன்கிழமை) சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார்.
முன்னதாக இதுகுறித்து பேசிய இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும். நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகள் சட்டம் வரும் சட்டசபை கூட்டத்தொடரில் திருத்தப்படும். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெறுவது உறுதி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் மிக்க அவைகளில் இடம்பெறுவார்கள்" என்று தெரிவித்திருந்தார்.